10665 ஈராயிரம் நூல்களை ஆய்ந்த பேராசிரியர் அல்லாமா உவைஸ்: நவீன காவியம் ஆய்வு நூல்.

காத்தான்குடி பௌஸ். பாணந்துறை: மௌலவி காத்தான்குடி பௌஸ், ஸைனி மன்ஸில், 23/6, வத்தல்பொல வீதி, ஹேனமுல்லை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை).

144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-54528-1-6.

இலங்கை வாழ் முஸ்லிம் தமிழ் அறிஞர்களுள் பேராசிரியர் அல்லாமா எம்.எம்.உவைஸ் முக்கியமானவர். சுவாமி விபுலானந்தரின் தமிழ் மாணாக்கருள் ஒருவர். சுவாமி விபுலானந்தர் கீறிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு கோட்டை, பெருந் தெருவாக்கிக் காட்டியவர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய இலக்கியங்களை தேடித்தொகுத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவரது வாழ்வும் பணிகளும் பேராசிரியருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த மௌலவி காத்தான்குடி பௌஸ் அவர்களால் இங்கே காவியமாகப் பாடப்பெற்றுள்ளன. பேராசிரியரின் நூல்விபரப் பட்டியல் ஒன்றும் இந்நுலில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் எழுதியவையும், மொழிபெயர்த்தவையும், பதிப்பிக்கப்பெற்றவையுமான நூல்களின் விபரங்கள் உள்ளடங்குகின்றன. பேராசிரியர் பெற்ற பட்டங்களும், அவர் பற்றிப் பிற பிரமுகர்களின் கருத்துக்களும்  இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை வாழ் ஆலிம்களில் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில்) மௌலவி காத்தான்குடி பௌஸ் மிகவும் நன்கு அறியப்பெற்றவர். பன்னூலாசிரியரான அவரது 17ஆவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

15248 கணிதம் கடினமானதா?.

கிட்னன் கோபிந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 96 பக்கம்,