அ.மரியதாசன். கொழும்பு: அ.மரியதாசன், 120, ஹல்ஸ்ட்ரொப் வீதி, 1வது பதிப்பு, 1953. (கொழும்பு: வீரகேசரி அச்சியந்திரசாலை).
ii, 43 பக்கம், தகடுகள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் மூன்று படைப்புகளை அடிப்படையாக வைத்து இயற்றப் பட்ட மூன்று நெடுங்கவிதைகளின் தொகுப்பு இது. பூபதிலீயர் (King Lear), அம்லெது (Hamlet), நீ விரும்பியவாறு (As you like it) எனத் தமிழ்ப் பெயர்களுடன் இவை இயற்றப்பட்டுள்ளன. பூபதிலீயர் என்ற கவிதை, வீரகேசரியில் 1951இல் பிரசுரமானது. அம்லெது – தினகரனில் 1953இல் பிரசுரமானது. நீ விரும்பியவாறு என்ற மூன்றாவது நெடுங்கவிதை இந்நூலிலேயே முதற்பிரசுரம் காண்கின்றது. ‘முக்கனிச்சாரம் என்பது மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்ற பூபதிலீயர், அம்லெது, நீவிரும்பியவாறு என்னும் ஷேக்ஸ்பியர் அருளிய முக்கனிகளின் சாறு எனப் பொருள்படும்’-ஆசிரியர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130444).