10676 அன்பின் ஆழம்.

தேவகி கருணாகரன். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).

xvii, 228 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-24-6.

அவுஸ்திரேலியாவில் நியு சவுத்வேல்சில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளியான தேவகியின் இச்சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் அனைத்திலும் மனித சமுதாயத்துக்குப் பொதுவான சில பண்புகளே கதைக்கருவாக அமைவதையும், நடப்பியல் சார்ந்து எழுதப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. உணர்ச்சிகளையும், நினைவோட்டத்தையும் நன்கு வெளிப்படுத்தி கதைகளுக்கு ஒரு முழுமையையும் ஆழத்தத்தையும் கொடுத்து உருவாக்கியுள்ளார். நிறைவு, விடிவு, ஒரு வினாடி, பேரழகி, நெஞ்சம் மறப்பதில்லை, அன்பின் ஆழம், வெற்றிடம், சொந்தம் விட்டுப் போகுமா, அதிசயம், குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு, முடிவு உண்டா, மாதங்கி ஆகிய 12 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. தமிழ்நாட்டின் கலைமகள், இலங்கையின் வீரகேசரி, தினக்குரல், அவுஸ்திரேலியாவின் கலப்பை ஆகிய இதழ்களில் வெளியான கதைகள் இவை. மித்ர வெளியீட்டகத்தின் 236ஆவது பிரசுரம் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57789).

ஏனைய பதிவுகள்