10687 உறவு: சிறுகதைகள்.

நீர்வை பொன்னையன். கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இணை வெளியீடு, பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, கொழும்பு 11, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: RST Enterprises, 114, டபிள்யூ ஏ சில்வா மாவத்தை).

113 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1810-23-8.

நீர்வை பொன்னையனின் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். 1957இல் நீர்வை பொன்னையனின் முதலாவது சிறுகதை பாசம் என்ற தலைப்பில் ஈழநாடு வாரமலரில் பிரசுரமாயிற்று. 1960இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘மேடும் பள்ளமும்’ என்ற தலைப்பில் மக்கள் பிரசுராலயத்தினால் வெளியிடப்பட்டது. 1957 முதல் 2014 வரை பாசத்திலிருந்து உறவு வரை தன்னால் 107 கதைகளை எழுத முடிந்துள்ளதாக இந்நூலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூலில் விடிவு, மனச்சரிவு, பொட்டு, வனவாசம், முறிவு, அர்ப்பணம், அதிர்ச்சி, சிதைவு, தேய்நிலா, மீட்சி, உறவு ஆகிய 11 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சமூக அரசியல் மாற்றத்திற்கான மக்கள் போராட்டமொன்றை அடிநாதமாகக் கொண்டே இவரது கதைகள் படைக்கப்படுகின்றன. விடிவு என்னும் கதையில் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையையும் மனச்சரிவு என்ற கதையில் உறவுகளுக்கிடையேயான போராட்டங்களையும், பொட்டு என்ற கதையில் ஒரு பெண்ணின் ஆடம்பரப் பழக்கத்தால் ஏற்படும் இழப்பையும் காணமுடிகின்றது. தேய் நிலா, மீட்சி, உறவு என இந்நூலின் ஒவ்வொரு கதையும் ஈழத்தின் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் கோலங்களைப் பிரதிபலிக்கின்றது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 41154). 

ஏனைய பதிவுகள்

Aquele Apostar Poker Online Dado

Content Quais São Os Melhores Jogos Infantilidade Video Poker Acessível? – casino online Casino Os Melhores Sites De Poker Online Dado Poker Online Apontar Brasil:

En İyi Bahis Sitelerinde Bonus Kullanımı İpuçları

Efesbet gibi platformlar, kullanıcıların güvenli bir ortamda oyun oynamalarını sağlayacak önlemler alarak oyun deneyimlerini iyileştirir. Bahis oranlarında lider olan Efesbet, anlık promosyonlarla kullanıcılarını memnun etmeyi