பிரவீணன் மகேந்திரராஜா. தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
xii, 174 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 400., அளவு: 17×12.5 சமீ.
அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராகப் பணியாற்றும் கலாநிதி பிரவீணன், ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளி கோகிலா மகேந்திரனின் மகன். ஏலியன் எனப்படும் வேற்றுலக உயிரினங்கள் பற்றிய சுவையானதும், விஞ்ஞான அறிவுபூர்வமானதாகவும் எழுதப்பட்ட கற்பனைக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை முன்னர் தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்திருந்தன. குறுஞ்செய்தி, ஒற்றன், சிவப்பு நிலம், குரங்குக்கோயில், எஸ்.கியூ 26, தண்ணீரைத்தேடி, நடமிடும் தீ, சணல் வயலில், குறுங்கோளில் சுரங்கம், ஐ.எஸ்.எஸ்., தனியார் ரொக்கெட், இது என்ன கனவா?, டனியூப் நதி, அங்கா- பூ, நிலவைத்தேடி, யாரும் இல்லாத தீவொன்று ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கதைகள் இதில் அடங்கியுள்ளன.