எஸ்.முத்துமீரான். (இயற்பெயர்: சின்னத்தம்பி முத்துமீரான்). சென்னை 600017: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் ரோட், முதல் மாடி, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், தியாகராய நகர், 1வது பதிப்பு, மே 2007 (சென்னை 600002: உதயம் ஓப்செட்).
144 பக்கம், விலை: ரூபா 300., அளவு 21×14 சமீ., ISBN: 978-955-50199-0-3.
இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட முத்துமீரானின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி. ஆசிரியராக, கல்லூரி அதிபராக, சட்டத்தரணியாக எனப் பல்வேறு பரிமாணங்களில் களம் கண்ட இவரது கதைகளில் ஆழிப்பேரலையின் கொடுமையின் சமூகப் பாதிப்பு, முஸ்லீம் சமூகத்தில் நிலவும் குறைபாடுகளும் மூட நம்பிக்கைகளும் போன்ற அம்சங்களைக் கிராமிய மணம்கமழும் உரைநடையில் தரிசிக்க முடிகின்றது. பொறுப்புச் சறுப்பு, தாய்மை சாவதில்லை, கொத்தும் கொறயுமா, லாவயக் கறி நல்லாத்தானிரிக்கி, ஏழ நெருப்பு எல்லாரையிம் சுடும், ஊரோடிப் பேய்களும் நேந்துட்ட சீவன்களும், டேய் காக்காடா, கக்கக் கனிய, எங்கும்மா எப்ப வருவா?, சில்லாங்கொட்ட தெறிச்சாப்போல, மொடக்குத் திறுக்கு, கட்டுமட்டா நிண்டு, மைய்யத்து வீடு, எல்லோரும் மாப்பிள்ளைதான், பஞ்சானும் குஞ்சுகளும், இப்தார் ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.