ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்).
192 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-929715-0-6.
கண்டி வீரன்: சிறுகதைகள்.
ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 3வது பதிப்பு, டிசம்பர் 2018, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014, 2வது பதிப்பு, பெப்ரவரி 2016. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-929715-0-6.
ஷோபாசக்தி எழுதித் தேர்ந்த சிறுகதைகளான ரூபம், தங்கரேகை, எழுச்சி, கப்டன், மாதா, கச்சாமி, காணாமற் போனவர், லைலா, வாழ்க, கண்டிவீரன் ஆகிய பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். 2011-2014 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள், இனவிடுதலை என்கின்ற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற் போரையும், புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர்கொள்கின்ற உளவியல் அவதியையும் ஒருங்கே தெளிவாகப் பிரதிபலிக்கக் கூடியவை. இவை காலம், ஆனந்த விகடன், ஆக்காட்டி, அம்ருதா, உரையாடல், குவர்ணிகா ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளிலும் தொகுப்பு நூல்களிலும் முன்னதாகப் பிரசுரமானவை.