ஸ்ரீபிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: உயர் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vii, 95 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-430-0.
உயர்கல்வி மாணவர்களின் திறன் ஊக்கவிப்புக் கருதி உயர் கல்வி அமைச்சு நடாத்திய தமிழ்மொழி மூல ‘ஆற்றல்’ போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. உயர்கல்வி மாணவர்களுக்கிடையே இலைமறைகாய்களாக இருக்கும் இலக்கிய ஆற்றல்களை இனம்காண்பதற்கு உதவுகின்ற ஆற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் அறுவடை இது. சிறுகதைப் பிரிவுப் போட்டியில் கலந்துகொண்ட பல மாணவப் படைப்பாளுமைகளிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்த 12 படைப்புக்கள் வாசக உலகின் பார்வைக்கென இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. சுண்டல் பையன், ஆயிசா, லெவரியா, பிரிவில் புரிந்த பிரியம், தியாகம், வேலியே பயிரை மேய்ந்தால், உறவுகள், வந்ததே வசந்தம், ஒரு எழுத்தாளன் ஏமாற்றப்படுகிறான், நெஞ்சில் நீங்காதவளுக்காக, பாலை துளிர்த்தது, வெளி வேசம் ஆகிய தலைப்புகளில் இவை படைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி அமைச்சின் தமிழ்-ஆற்றல் தொடர்பிலான முதன்மை இணைப்பாளராகப் பணியாற்றிய கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன் இக்கதைகளைத் தொகுத்திருக்கிறார்.