10697 காவியமாய் நெஞ்சின் ஓவியமாய்.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, ஹவ்லொக்  டவுன், 1வது பதிப்பு, மார்கழி 2011. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

168 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-53921-0-5.

இரத்தினவேலோன் தனது பதினான்காவது நூலாக இதனை வெளியிட்டிருந்தார். நேற்றைய காற்று, தாச்சிச் சட்டி, தொலையும் முகவரிகள், வேராகி நின்றாய், புத்தெழில், கோபுரங்கள் சாய்கின்றன, கனவாய் கானலாய், அழியாத தடங்கள், காவியமாய் நெஞ்சின் ஓவியமாய் ஆகிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. சுயசரிதைப் பாணியில் கதைசொல்லும் பாங்கு ஆசிரியரின் சிறப்புமிகு முத்திரையாகும். தன் மனப் பதிவுகளை இயல்பானதாக, வெளிக்கொணர இந்தப் போக்கினைக் கடைப்பிடித்துள்ளார். தனது சாதாரணமான வாழ்வியலினுடாக நான்கு தசாப்தங்களாக எமது சமூகத்தில் நிகழ்ந்த மாறுதல்களை, மேற்கிளம்பிய வெளிப்பாடுகளை இச்சிறுகதைகளில் சித்திரித்துள்ளார். தினக்குரல், மல்லிகை, லண்டன் பூபாள இராகங்கள், மலேசிய சிற்றிதழான-உங்கள் குரல், ஞானம், ஜீவநதி ஆகிய ஊடகங்களில் இவை பிரசுரமாகி வாசகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தன.

ஏனைய பதிவுகள்