பிபிலை நா.ஜெயபாலன் (மூலம்), அ.யோகநந்தனி (தொகுப்பாசிரியர்). பதுளை: ஊவா மாகாண நூலக சேவைகள் சபை, ரேஸ்கோர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2015. (பதுளை: இன்டிசைன் அட்வர்டைசிங், இல. 9, 1வது தளம், கொக்கோவத்தை வீதி).
xiii, 139 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42205-0-8.
ஊவா மாகாணத்தின் இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான பிபிலை நா.ஜெயபாலனின் 53 கவிதைகளினதும், ஆனந்தக் கண்ணீர், நிழல் வார்ப்புக்கள், ஏமாற்றம், இன்னொரு சுமைதாங்கி, கூடைக்குள் தேசம், மனிதநேயம், ஒரு தீபம் எரிய, புதிய தாய் ஆகிய எட்டுச் சிறுகதைகளையும் கொண்ட தொகுப்பு. இலங்கை நூலகச்சங்கத்தின் இரண்டாவது தரத்தின் பரீட்சைத்தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்திசெய்யும்வகையில் சமர்ப்பிப்பதற்காக மேற்கொண்ட நூல்விபரப்பட்டியலாக்கத்தின் விரிவான நூலாக்க முயற்சி இதுவாகும். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001428).