10702 கொடுமைகள் தாமே அழிவதில்லை.

செ.கணேசலிங்கன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-659-123-1.

ஈழத்தின் படைப்பிலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான செ.கணேசலிங்கன் அவர்களின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் தொகுப்பு இது. கொடுமைகள் தாமே அழிவதில்லை, பாணும் கேக்கும், கவர்ச்சியும் காதலும், ஊமைகள், நகர்வலம், சட்டங்கள் எங்களுக்கே, புதிய சுலோகங்கள், பூசாரிகள், என்னதான் செய்துவிடப் போகிறார்கள்?, புதிய சந்திப்பு, குற்றவாளிகள், இரு முனைகள், வெற்றிபெற முடியாது, பட்டினி கிடந்தது சாகமாட்டோம், கடமையும் சேவையும், தாலியும் போய்விடும், கூப்பன் வேண்டாம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 முற்போக்குச் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 201133). 

ஏனைய பதிவுகள்