ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, நவம்பர்; 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(8), 157 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-95096-8-0.
ஆற்றங்கரை அப்பா, எறிந்ததை எடுத்தவர்கள், முள்ளை முள்ளால்.., வெள்ளைக் கொடிகள், வாக்களிக்க வாரீகளா?, சீட்டுக்காசி, வாரிசு, தேவை ஒரு மாப்பிள்ளை, நசிந்து மடியும் புற்கள், விருது அல்ல விழல், காகமூளை, வேதியல் மாற்றம், கண்கள் திறந்தன, தெரு நாய், காட்டுத் தேங்கா, அவர்கள் மனிதர்கள் சலாமத் போ ஆகிய 17 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தலைப்புக் கதைத் தலைப்பான சலாமத் போ என்ற சொல் பிலிப்பீன் நாட்டில் நன்றி என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகக் குறிப்பிடுவர். இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் நிதியுதவியுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. நூலின் பின் அட்டையில் நூலாசிரியரின் புகைப்படத்துடன் அவரைப் பற்றிய செல்வராணி வேதநாயகத்தின் குறிப்புகள் இவ்வாறு காணப்படுகின்றன. ‘எழுத்தாளரின் இதயம் வாசகர்களின் இதயங்களோடு பேசுகிறது. கலாசாரப் பெறுமானம், அந்தரங்க சுத்தியான நேர்மை, சமாதான சகவாழ்வு, யுத்தக் கொடுமையற்ற தேசம் ஆகியவைதான் ஜுனைதா ஷெரீபின் ஆன்மாவின் இராகங்கள். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களில் மிகக்கூடுதலான நாவல்களை எழுதியவர் இவர்’.