10707 சிறகடிக்கும் சிறுகதைகள்.

சித்திரவேல் அழகேஸ்வரன். கொழும்பு: சிவகாமி பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கொழும்பு 12: எஸ்.எஸ்.கே. பிரின்டர்ஸ், BLG -5, டயஸ் பிளேஸ்).

x, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4624-02-3.

‘என் எண் புதிர்கள்’ என்ற முதலாவது நூலைத் தொடர்ந்து தனது சிறுகதைகளைத் தொகுப்பாக்கி வழங்கியிருக்கும் அழகேஸ்வரன், கணித ஆசிரியராகக் கல்விப் புலத்தில் பணியாற்றுகிறார். சாதாரணமாக அன்றாடம் நடைபெறும் பிரச்சினைகளை, வலிகளை, தடுமாற்றங்களை, கருப்பொருளாக வைத்துத் தனது ஆக்கங்களை வடித்திருக்கிறார். சிறந்த மொழிநடை, ஈற்றில் சிந்திக்கவைக்கும் பக்குவம் என்பன குறிப்பிடத்தக்கவை. சித்திர ஆசிரியர் ரதீசின் ஓவியங்கள் கதைகளுக்கு மெருகூட்டுகின்றன.  மீண்டு(ம்) வருவாள், பொழுது விடியும், மனிதர்களுக்கு மட்டும் தானா, டியூஷன் பீஸ், அவன் மனசுக்குள்ள க(வி)தை, சாயம் போன வண்ணாத்திப்பூச்சி, இன்னைக்கு மட்டுந்தானா, ஆசையில் முதற்கடிதம், தீக்குள் வாழ்வை வைத்தால், வெறும் பேச்சு மட்டுந்தானா, குடியைக் கெடுத்த குடி, என் மகன் வரப்போறான், உங்களால் முடியும் ஆகிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 193432). 

ஏனைய பதிவுகள்