வெலிப்பன்னை அத்தாஸ். வெலிப்பன்னை: மொடர்ன் ஸ்டடி சென்டர், 41B, முஸ்லிம் வீதி, 1வது பதிப்பு, மே 2014. (பேருவளை: பொசிட்டிவ் பிரின்ட், பள்ளி வீதி).
xx, 75 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×14.5 சமீ.
மனித வாழ்வின் கூறுகள், பிரச்சினைகள், தேவைகள் போன்ற வாழ்வியல் அம்சங்களைக் கருவாகக்கொண்ட பன்னிரு சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. தியாகம், அலிமா விமானத்தில் பயணிக்கிறாள், பெட்டிசன் பிறந்தது, காய்த்த மரம், கணித பாடம், வாழ்க்கை, குழந்தை மனம் பேசுகிறது, தாய்க்காக, அழகு இல்லாதவள் வாழ்வு, ஐம்பது ரூபா, கண் திறந்த பின், பெருநாள் பரிசு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. தியாகம் என்ற சிறுகதை, வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு வெளிநாட்டுப் பணிப்பெண்ணின் வாழ்க்கை பற்றியது. தொழிலுக்காக வெளிநாட்டுக்குப் பயணிக்கும் ஒரு பெண்ணின் கதையாக அலிமா விமானத்தில் பயணிக்கிறாள் என்ற கதை அமைந்துள்ளது. பெட்டிசன் பிறந்தது, கணித பாடம் போன்ற கதைகள் பாடசாலைச் சூழலைக் கதைக்களனாகக் கொண்டமைந்தவையாகவும் உள்ளன. தாய்க்காக என்ற கதை தாய்ப்பாசம் பற்றியது. அழகு இல்லாதவள் வாழ்வு என்ற கதை தன்னை அவலட்சணமானவள் என்று கருதிவாழும் ஒரு பெண்ணின் மனநிலையைப் படம் பிடித்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57454).