தங்கன் (இயற்பெயர்: ஏ.தங்கத்துரை). கிழக்கு மாகாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவர்கிரீன் அச்சகம்).
(8), 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4628-13-7.
‘சிமிலி விளக்கு’ என்ற சிறுகதையினூடாகப் படைப்புச் சூழலுக்கு அறிமுகமான தங்கன் இதுவரை 75 சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதி ஈழத்து இலக்கிய உலகில் ஆழத்தடம் பதித்து வருபவர். இந்நூல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பாகின்றது. இதில் அந்தச் சொல், சுமைகள், மண்ணாசை, பொட்டணிக்காரன், வைராக்கியம், நாம் செல்லும் பாதை, புறப்பாடு, தரிசு நிலம், மருந்து?, சின்னத்தம்பியின் வருடப்பிறப்பு, பிச்சைக்காசு, கனல்கின்ற தணல், அழைப்பு வந்தது, செய்வினை ஆகிய 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55905).