10714 தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்.

தெளிவத்தை ஜோசப் (இயற்பெயர்: சந்தனசாமி ஜோசப்). ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xix, 185 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1805-06-7.

தெளிவத்தை ஜோசப் ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் எனப் பல்பரிமாணங்களில் புகழ்பூத்தவர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவரான இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பெப்ரவரி 16, 1934 இல் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார். காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற நூல்; 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. மேலும் இவர் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும்; பெற்றுள்ளார்;. இது இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதி. ஊன்றுகோல், பழம் விழுந்தது, பீலி மேலே போகிறது, எக்சீமா, ஒரு புதிய உயிர், பொட்டு, உயிர்ப்பு, இன்னுமொரு, பந்து, சுவர், எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், உயிர், செத்துப் போகும் தெய்வங்கள், இறுமாப்பு, சாம்பல், மந்திரக்கோல், வேடிக்கை மனிதர்கள் அல்லர்ஆகிய 17 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199534). 

ஏனைய பதிவுகள்

Book Of Madness Kostenlos Spielen

Content Wo Gibt Es Eye Of Horus Freispiele Ohne Einzahlung? Holen Sie Das Maximum Aus Den Verschiedenen Arten Von Freispielen Heraus Mehr Slots Von Netent