நிவேதா உதயராயன். சென்னை 26: கிரீன் புக்ஸ், 8ஏ, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 26: கிரீன் புக்ஸ், 8ஏ, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழநி).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
நூலாசிரியர், யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1985இல் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, கடந்த 18 ஆண்டுகளாக ஜேர்மனியிலும், பின்னர் லண்டனிலும் வாழ்ந்துவருபவர். 14 ஆண்டுகளாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டறை ஆசிரியராகவும் தமிழ்ப்பள்ளி அதிபராகவும் சேவையாற்றுபவர். இந்நூலில் நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ, பெண், நினைவு சுடும், நிறம் மாறும் உறவு, அக்கா எனக்கொரு கலியாணம் பேசுங்கோ, எத்தனை மரங்கள் தாவும், மனதே மயங்காதே, வாழ்வு வதையாகி, ரயில் பயணம், இப்படியும் ஒரு தாய், அந்த மூட்டைப் பூச்சி, முதல் கடிதம், நினைத்தாலே நெஞ்சு பக் பக், வசந்தம் தொலைத்த வாழ்வு, நட்பின் கதை ஆகிய 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது 12.7.2014இல் லண்டனில் வெளியீடு கண்ட நூல்.