10724 வன்னி வலி (சிறுகதைத் தொகுப்பு).

வவுனியூர் இரா.உதயணன். கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1, நெல்சன் இடம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி).

(4), xii, 160 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42052-0-8.

ஈழ விடுதலைப் போரின் கொடூர வலிகளைத் தாங்கிய வன்னி மண்ணின் மக்களின் மாறுபட்ட வாழ்க்கைக் கோலங்களின் வலிகளைச் சுமந்து நிற்கும் சிறுகதைகள் இவை. வன்னி மக்கள் எதிர்கொள்ளும் ஆறாத் துயரங்கள், பிரச்சினைகள், கலாச்சாரச் சீரழிவுகள் உட்பட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளின் அம்சங்களான வறுமை, தொழிலின்மை, வீடற்றநிலை போன்ற இன்னோரன்ன விடயப் பரப்புக்களின் பகைப்புலத்தில் தாம் தரிசித்த தரிசனங்களை சிறுகதைகளின் வாயிலாக முன்வைத்திருக்கிறார். இன்று வன்னி மக்களின் உண்மை நிலையை அறிந்து உதவிக்கரம் நீட்டாமல்,  வேடிக்கை பார்க்கும் சுயநலம் மிக்க மனிதர்களைச் சுட்டிக்காட்டி அவர்களின் செயற்பாடுகளைச் சாடுகின்றார்.  ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான வண்ணப்படங்கள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. மனிதம் கொன்று மிருகம் மட்டும், வலியின் சுமைகள், இப்படியும் மனிதர்கள், கருவறைக் கனவுகள், ஏமாற்றுக்களும் ஏமாற்றங்களும், பாசப்பிணைப்புகள், மாற்றங்கள், தேடிக்கொண்ட சொந்தங்கள், விடியலைத்தேடும் விண்மீன்கள், தலைமுறைகள், புதியஉறவுகள், மறுபக்கம், தோழமை, மனித எச்சங்கள், சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி, இன்னும் அவனுக்காக, தாலி சிரித்தது ஆகிய 17 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Roulette Kostenlos and Mit Echtgeld Spielen

Content Sizzling Hot Deluxe echtgeld app: Unterscheidet Sich Online Roulette Vom Roulettespiel In Landbasierten Casinos? Online Spielautomaten In Österreich Europäisches Roulette Vs Amerikanisches Roulette Französisches