10728 ஹராங்குட்டி: சிறுகதைகள். முஸ்டீன். 

வாகனேரி 30424: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம், SIM Publication, River Bank Road, Kawatthamunai, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

296 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1447-04-5.

இந்தத் தொகுதியில் 12 கதைகள் அடங்கியுள்ளன.  போர்க்காலத்தில் முஸ்லிம் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வின் வெட்டுமுகத்தை ஒரு வலுவான முனைப்புடன் தருகின்றது. பல்வேறு இயக்கங்கள், விடுதலைக்காக இயங்கிய காலம், இந்திய அமைதிப்படைக்காலம், சமாதான ஒப்பந்தக் காலம் ஆகிய காலகட்டங்களின் நடவடிக்கைகள் இக்கதைகளில் பதிவாகியுள்ளன. அனேகமானவை அக்கால நிகழ்வுகளின் உண்மைப்பதிவுகள்.  தலைப்புக்கதையான ஹராங்குட்டி வித்தியாசமானது. மார்க்கத்தின் பெயரால் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் மௌலவிகள் பற்றியது. முஸ்லிம் மார்க்கப் போதகர்களை விமர்சிக்கும் துணிச்சலான கதை இது. பிற இஸ்லாமிய எழுத்தாளர்கள் எழுதத் தயங்கும் விடயங்களை எழுத்தாளரும், கவிஞரும் ஊடகவியலாளரும் குறுந்திரைப்பட நெறியாளரும் என பல்வேறு பரிமாணங்களில் அறிமுகமான முஸ்டீன் கதைகளாக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Titanic 1997 flick Wikipedia

Content Listen to Megan Thee Stallion Synergy Which have BTS’ RM on the ‘Neva Enjoy’ For much more Titanic reputation, here are a few a