வி.ஜீவகுமாரன். சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123A, புதிய எண் 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-82648-02-4.
அகதி, ஏதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பதிவுசெய்யும் நாவல் இது. தமிழியல் விருது, தகவம் விருது, கு.சின்னப்ப பாரதி விருது ஆகியவற்றைத் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ள வி.ஜீவகுமாரனின் இந்நாவல், தமிழகத்தில் ப.சிங்காரம் விருதினைப் பெற்றது. வி.ஜீவகுமாரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் டென்மார்க்கில் வாழ்ந்துவருகிறார்.