சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை மூன்றாம் ஆண்டு நினைவு வெளியீடு, தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
55 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
இந்நூலில் கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை எழுதி, இலங்கை வானொலியின் கலைக்கோலம் நிகழ்ச்சியில் வழங்கியிருந்த உள்ளுறை உவமை அணிநலம், சிலப்பதிகாரத்தில் முப்பரிமாணக் கோலம், அகநானூற்றில் ஓர் அகத்திணைக் கவியின்பம், ஈழநாட்டுப் புலவர்களின் நாற்கவியின்பம், கூந்தல் அவிழ்ந்ததும் கொற்றம் கவிழ்ந்ததும், பொறுமைகாத்துப் பெருமைபெற்ற காவிய நாயகர்கள், பசிவந்திடப் பத்தும் பறந்துபோம், நிகண்டு இலக்கியம், எண்ணலங்கார அணிநலம், மறைபொருள் கூற்றுக் கவியின்பம், பசிப்பிணி மருத்துவர், சிலேடை அணிநலம் ஆகிய 12 வானொலி உரைகள் இடம்பெற்றுள்ளன. தன் துணைவியாரின் மறைவின் நினைவாக முதலாம் ஆண்டில் (2011) ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொகுதியையும், 2012இல் இரண்டாம் ஆண்டு நினைவாக ‘சிவகாமித் தமிழ்’ என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்ட சைவப்புலவர், இந்நூலைத் தனது துணைவியார் சிவகாமசுந்தரியின் (24.3.1944-3.7.2010) மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக 2013இல் வழங்கியுள்ளார்.