சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை நான்காம்; ஆண்டு நினைவு வெளியீடு, தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
181 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
தன் துணைவியாரின் மறைவின் நினைவாக முதலாம் ஆண்டில் (2011) ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொகுதியையும், 2012இல் இரண்டாம் ஆண்டு நினைவாக “சிவகாமித் தமிழ்’ என்ற கவிதைத் தொகுதியையும், 2013இல் மூன்றாம் ஆண்டு நினைவாக ‘இலக்கியத் தமிழ் இன்பம்’ என்ற நூலையும் வெளியிட்ட சைவப்புலவர், இந்நூலைத் தனது துணைவியார் சிவகாமசுந்தரியின் (24.3.1944-3.7.2010) மறைவின் நான்காம் ஆண்டு நினைவாக 2014இல் வழங்கியுள்ளார். இது சைவத் தமிழின்பம், இலக்கியத் தமிழின்பம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. இலங்கை வானொலியின் கலைக்கோலத்தில் வழங்கிய உரைகளின் தொகப்பாக முன்னைய ஆண்டு (2013) வெளிவந்த இலக்கியத் தமிழின்பத்தை ஒரு பகுதியாகவும், இலங்கை வானொலியில் நிகழ்த்திய சைவப் பேச்சுக்கள், நற்சிந்தனைகள் என்பனவற்றின்; தொகுப்பான சைவத் தமிழின்பத்தை மற்றொரு பகுதியாகவும் கொண்டுள்ளது.