அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-8715-40-6.
மகாகவி பாரதியார் எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’ பற்றிய அகளங்கனின் இவ்விலக்கியக் கட்டுரை வீரகேசரியின் கலைக்கேசரி பகுதியில் தொடராக வெளிவந்தது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் நோக்குடன் வில்லிபாரதம், வியாச பாரதம், ஆகியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டுக் காட்டும் ஆசிரியர், அரச சபைக்கு இழுத்துவரப்பட்டு அவமானப் படுத்தப்பட்ட பாஞ்சாலியின் நிலைமையை, அடிமைப்பட்ட பாரதமாதாவின் நிலையாகக் காட்டி, ஆவேசம்கொள்ளும் பாரதியின் உணர்வினை விபரிக்கின்றார். மேலும் தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்களையும் சிறப்புகளையும் பொருத்தமான வகையில் எடுத்துக்காட்டுகின்றார். சமூகத்தின் சரிபாதியான பெண்கள் கௌரவமான, தன்மானத்துடனான வாழ்க்கைக்கு உரிமையுடையவர்கள் என்ற பாரதியின் சரிநிகர் சமானத் தத்துவத்துடன் ஆசிரியரும் உடன்படுகின்றார்.