வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன்தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 817, ஆஸ்பத்திரி வீதி).
(6), 123 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0635-35-1.
ஆசிரியர் தேசிய, பிராந்தியப் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரமான ஆக்கங்களின் தேர்ந்த தொகுப்பு இது. வாழ்ந்த வாழ்வின் சுவடுகளின் மீது மீண்டும் நடப்பது ஆனந்தம் என்று கருதும் நூலாசிரியர் அருகிவரும் கடிதம் எழுதும் பண்பாடு, முதல் மாறும் வாழ்வியலும் மறைந்துபோகும் பொருட்களும் என்பது வரையான 29 ஆக்கங்களை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். தொலைக்காட்சியின் பாதிப்பு, பயணஅனுபவங்கள், வாசிப்பின் பயன்பாடு, சுற்றுலாத்துறை, இயற்கையை பேணல், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், தமிழ்ச் சொற்களின் மருவல்கள், ஏ9 பாதைத் திறப்பு, சூழல்மாசடைதல், இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கைமுறை, மாற்றுத்திறனாளிகள், பிரதேச உற்பத்தித் துறை, மத்தியஸ்த சபைகள், சிறுவர்களுக்குக் கதைசொல்லல், சனசமூக நிலையங்கள், சினிமாத் தியேட்டர்கள், முதியோருக்கான பராமரிப்பு நிலையங்கள், குருதிக் கொடையாளர்கள், ஓய்வூதியத்திட்டங்கள், ஊடகப்பண்பாடு, யாழ்ப்பாணத்தில் விடுதிகளின் பெருக்கம், பனங்காய்க் காலம், நவீன திருமணங்கள், இயற்கை வளங்களைக் காத்தல், வானிலை மாற்றம் என வித்தியாசமான தளங்களை இவரது கட்டுரைகள் ஆழமாக அலசுகின்றன. இவை முன்னர் உதயன், வீரகேசரி, யாழோசை நாளிதழ்களில் பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54909).