10790 பொ.கைலாசபதியும் பொருளாராய்ச்சியும்.

ச.பரநிருபசிங்கம். யாழ்ப்பாணம்: கலைப்பீட வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்).

(2), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 25×18.5 சமீ.

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் பன்முகப்பட்ட சிந்தனைகளுக்கு மூலகாரணமாயிருந்தவர் அவரது ஆசானான பொ.கைலாசபதி அவர்களாவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவ்விருவரும் இலக்கியத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அறிஞர் பொ.கைலாசபதி அவர்களுடன் இறுதிநாள்வரை தொடர்புற்று, அவரது பிற்கால சிந்தனைகளைப் பதிவுசெய்தும் வைத்திருந்தவர்களும் பண்டிதமணியின் பதிவேடுகளில் கண்ட பொ.கைலாசபதியின் சிந்தனைகளை விடய அட்டவணைப்படுத்தியவரும், அவரது இரு தசாப்த சிந்தனைக் குவியல்களை வரன்முறைப்படுத்தியவருமான அளவெட்டி ச.பரநிரபசிங்கம் அவர்கள் பண்டிதமணி சி.க. அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு சுருக்கமான கட்டுரையை எழுதியிருந்தார். பின்னர் அதன் பின்னணியில் 11.9.1991 அன்று பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இதுவாகும்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 102563).  

ஏனைய பதிவுகள்

Pay By Phone Casino Uk

Content Play jacks or better hd slot: Safe Gambling Coral Casino: Deposit 10 And Get A 30 Bonus! Are Withdrawals Supported By Pay With Mobile