10803 மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும்.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 48, Hallwicks Road, Luton, LU2 9BH இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, பங்குனி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-9930143-2-1.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் 2003 முதல் சுமார் பத்தாண்டுகளாக காலத்துக்குக் காலம் மலேசிய இதழ்களுக்கும், ஈழத்தில் தினக்குரல், ஞானம் போன்ற ஊடகங்களுக்கும், புகலிட ஊடகங்களுக்கும் ஆசிரியரால் எழுதப்பெற்றவை. நேர்காணல்கள் மலேசிய ஊடகங்களுக்காக வழங்கப்பட்டவை. மலேசியத் தமிழ் இலக்கியம்: ஒரு வரலாற்றுப் பார்வை, மலேசியத் தமிழ்நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு, மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியங்களுக்கூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள், மலேசியத் தமிழ் நூல்கள்: ஆவணப்படுத்தும் முயற்சிகள், சிங்கப்பூரில் தமிழ் நூலுக்குத் தேசிய விருது, வல்லினம்: உலகத்தமிழரை நாடிவரும் ஒரு மலேசியத் தமிழ்ச் சிற்றிலக்கிய ஏடு, மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா?, மலேசிய இலக்கிய நிகழ்வுக் கண்ணோட்டம், நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் மலேசிய விஜயம், மலேசிய இலக்கியம் உண்மையில் ஒடுக்கப்பட்டுள்ளது: நூலகவியலாளர் செல்வராஜாவுடனான ம.நவீனின் நேர்காணல், வரலாறுகளைப் பதிவுசெய்யவேண்டும்: நூல் தொகுப்பாளர் செல்வராஜா கூறுகின்றார் ஆகிய 11 தலைப்புகளில் இவ்வாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள 39 நூல்கள் பற்றிய குறிப்புரையுடன் கூடிய நூல்விபரப்பட்டியல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூல் ஆசிரியரின் 40ஆவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

15726 நேற்றைய மனிதர்கள்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  (8), x, 244 பக்கம்,