சு.சிறீகந்தராஜா (புனைபெயர்: பாடும் மீன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 14: பி.வி.ஆர் பிரின்டர்ஸ்;).
xii, 208 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12.5 சமீ.
களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் பாடும்மீன் சிறீகந்தராஜா இலங்கையில் சட்டத்தரணியாகவும் சமாதான நீதவானாகவும் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சங்க இலக்கியம் தமிழகத்தின் செழிப்பை, தமிழ் இனத்தின் வனப்பை, பண்பாட்டுச் சிறப்பை விளக்குவனவாகும். சங்ககாலம் பற்றிய பல சுவையான தகவல்களையும் சங்ககால இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளையும் இந்நூல் வழங்குகின்றது. சங்கங்கள், சங்கங்கள் இருந்தமை உண்மையா?, சங்க காலமும் சங்கங்களின் காலங்களும், கடற்கோள்களும் காலங்களும், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், சங்ககால மக்களின் வாழ்க்கை முறை, சங்க இலக்கியங்கள், அகத்தியம், தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்கள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு என இன்னோரன்ன 52 தலைப்புகளில் பல்வேறு சங்க காலத்து இலக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48639).