10814 திருக்குறள்: மணக்குடவர் உரை.

ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: அகில இலங்கைக் கம்பன் கழகம், 12, இராமகிருஷ்ண தோட்டம், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48Bபுளுமென்டால் வீதி).

xx, 394 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9396-50-5.

திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்றது மணக்குடவர் உரையாகக் கருதப்படுகின்றது. பரிமேலழகர் உரையையும், அவரது கருத்தையும் ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும். பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார். அதிகாரந் தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும் மதித்து அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்ட பெருமை வ.உ. சிதம்பரனாரைச் சாரும். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல், மணக்குடவரின் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார். முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும் 1849இல் சென்னையில் எம். வீராசாமியால் பதிப்பிக்கப்பட்டது என்பதைக் கருதும்போது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மணக்குடவர் உரை பொதுமக்களின் கவனத்திற்கு வராமலே இருந்தது என்பது தெரியவருகிறது. திருக்குறள் உரை என்றாலே அது பரிமேலழகர் உரைதான் என்னும் உயர்வு நிலையில் – உணர்வு நிலையில் பரிமேலழகரின் உரை தமிழர் மனத்தில் ஆட்சி செலுத்தியது. பரிமேலழகர் உரை வைதிக சிந்தனையை உள்ளடக்கியிருந்ததும் இலக்கண நுட்பம் செறிந்ததுமாக விளங்கியது இதற்கு முக்கிய காரணமாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறள் உரையை ஸ்ரீ பிரசாந்தன் ஈழத்தமிழர்களுக்கு இந்நூல் வழியாக அறிமுகப்படுத்துகின்றார்.

05.04.2012 அன்று கொழும்புக் கம்பன் விழாவில் வெளியிடப்பட்ட நூல். அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீட்டத் தொடரில் 20ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15863 அடிப்படைப் புவியியல்: இலங்கை, உலகம்-தரம் 10,11.

க.குணராசா, பிரியா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 292 பக்கம்,