10817 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி: 2ம் பகுதி.

தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம், தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி).

liv, (12), பக்கம் 485-837, தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

புறப்பொருள் என்பது பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளைக் குறித்துப் பேசும் இலக்கணமாகும். தொல்காப்பியத்தை அடுத்துப் புறப்பொருள் பற்றி விரிவாக விளக்கும் நூலைச் சேரமரபுவழித் தோன்றலான ஐயனாரிதனார் இயற்றியுள்ளார். அவர் தொல்காப்பியக் காலத்துக்கும் தம் காலத்திற்கும் இடையே உள்ள காலத்து புறத்திணைச் செய்திகளைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி ஓதியுள்ளார். அந்த ஓதல் முறையிலும் ஓர் ஒழுங்கைப் பேணியுள்ளார். அவை முறையே புறம், புறப்புறம், அகப்புறம் என்பனவாகும். புறப்பொருள் இலக்கண நூலுக்குத் தமிழகத்தில் மாத்திரமல்லாது ஈழத்திலும் உரையும் விளக்கமும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பொருணூல் விற்பன்னர் புலவர் நாகலிங்கம் சிவபாதசுந்தரனாரின் உரையாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85019).  

ஏனைய பதிவுகள்

11670 மனக்கண்: கவிதைத் தொகுப்பு.

எஸ்.சிவா (இயற்பெயர்: சுப்பிரமணியம் சிவதர்ஷினி). வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 19.5×14 சமீ. வவுனியா தேசியகல்வியியற்