10818 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி: 3ம் பகுதி.

தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம், தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, வைகாசி 1993. (யாழ்ப்பாணம்: சு.வே.அச்சகம், 104, கஸ்தூரியார் வீதி).

(16), தகடுகள், பக்கம் 838-921, புகைப்படம், விளக்கப்படம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.

புறப்பொருள் என்பது பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளைக் குறித்துப் பேசும் இலக்கணமாகும். தொல்காப்பியத்தை அடுத்துப் புறப்பொருள் பற்றி விரிவாக விளக்கும் நூலைச் சேரமரபுவழித் தோன்றலான ஐயனாரிதனார் இயற்றியுள்ளார். புறப்பொருள் இலக்கண நூலுக்குத் தமிழகத்தில் மாத்திரமல்லாது ஈழத்திலும் உரையும் விளக்கமும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் பொருணூல் விற்பன்னர் புலவர் நாகலிங்கம் சிவபாதசுந்தரனாரின் உரையாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 92801).  

ஏனைய பதிவுகள்

11824 கடலோரக் கிராமம் (நாவல்).

செ.குணரத்தினம். மட்டக்களப்பு: செ.குணரத்தினம், அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: எவர்கிறீன் அச்சகம்). ix, 94 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4320-30-7. மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்த கிராமத்து