10819 கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை.

வெலிகம ரிம்ஸா முஹம்மத். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த,மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

208 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-4156-2.

வாசிப்பின்பால் கொண்ட ஈர்ப்பினாலும், எழுத்துக்களின் மீது கொண்ட ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புகளோடு நல்ல வாசகியாக அறிமுகமான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அக்குறிப்புக்களைத் தொகுத்து நூலுருவாக்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார். கவிதை, சிறுகதை  நூல்கள் மட்டுமன்றி சஞ்சிகை, நினைவுமலர், பாடல் தொகுப்பு, குறுங்காவியத் தொகுதி எனப் பல்வேறு நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புகளையும் இத்தொகுப்பில் காணமுடிகின்றது. சுமார் 42 படைப்பாளிகளின் நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கணக்கீட்டுத் துறையில் கற்றுத்தேர்ந்ததுடன், 2004ம் ஆண்டு நிர்மூலம் என்ற கவிதையுடன் இலக்கியப் பிரவேசம் செய்தவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.  இது அவரது எட்டாவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்

Alive Speak

Such items include the kind of services offered, supply of totally free samples or training, costs, and methods of communicating with the fresh physics. If