மல்லிகாதேவி நாராயணன். கொழும்பு 13: மல்லிகைப் பந்தல், 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (கொழும்பு 13: வனிகோ பிரின்ட் சொல்யூஷன், 103, விவேகானந்தா மேடு).
xii, 96 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8250-42-6.
ஐந்து இயல்களில், 90களில் வெளிவந்த மல்லிகைச் சிறுகதைகளை ஆய்வுசெய்யும் முயற்சி. முதலாம் இயலில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றியும், சிற்றிதழின் தோற்றுவாய் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் இயலில் சிறுகதை தொடர்பான விளக்கங்கள், உலக அரங்கிலும் தமிழியல் வரலாற்றிலும் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி என்பன பற்றிப் பொதுவாகவும், ஈழத்தில் அத்துறையின் வளர்ச்சி பற்றி ஆழமாகவும் ஆராயப்பட்டுள்ளது. மூன்றாம் இயலில் 90களில் வெளிவந்த மல்லிகைச் சிறுகதைகள் ஈழத்தின் பொதுவான சமூகப் பிரச்சினைகளை எவ்விதம் அணுகியுள்ளன. நான்காம் இயல் தேசிய இனப்பிரச்சினையின் தாக்கங்களை பல்வேறு கோணங்களில் சிறுகதைகள் நோக்குவதை ஆராய்கின்றது. மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், மனப்பாங்குகள், அவர்களின் அவல வாழ்க்கை என்பன பற்றிச் சிறுகதைகள் எவ்வாறு பதிவுசெய்தன என்பதை இவ்வியல் அவதானிக்கின்றது. ஐந்தாம் இயலில் 90களில் வெளிவந்த சிறுகதைகளின் கலைத்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. பாத்திர வார்ப்பகள், கதைப் பின்னல்கள், நோக்க நிலை, நடை, கதைக்கரு என்பன பற்றி விரிவாக ஆராய்கின்றது. இறுதியில் ஆய்வாளரின் தொகுப்புரையும் உசாத்துணை பட்டியலும் காணப்படுகின்றன. முன்னேஸ்வரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் முன்னேஸ்வரம் வடிவாம்பிகை தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46863).