10823 அன்னையின் மடியில்: அமரர் திருமதி புஸ்பராணி அம்பலவாணர் நினைவாக வெளியிடப்படும்மலர்.

மயூரன் அம்பலவாணர் (தொகுப்பாசிரியர்). லண்டன்: அ.மயூரன், 4, Christ Church Green, Wembley, Middlesex, HA0 4DP, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

158 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ.

அமரர் திருமதி புஸ்பராணி அம்பலவாணர் (28.12.1951-30.09.2015) நினைவாக வெளியிடப்பட்டுள்ள நினைவுமலர இது. இதில் வழமையான அஞ்சலிகள், இரங்கல் கவிதைகள், அமரரின் வாழ்க்கை வரலாறு, பிரார்த்தனைக்குரிய திருமுறைத் திரட்டுகள் என்பவற்றை பக்கம் 1-58 வரையும் வழங்கியுள்ளனர். தொடர்ந்து நான்கு அறிவியல் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. உணவுப் பொருள்களின் போசணைப் பெறுமானங்கள் (கலாநிதி ந.சிவராஜா, திருமதி மலையரசி சிவராஜா), நீரிழிவு-சலரோகம்-சர்க்கரை வியாதி (கலாநிதி சிவ.தியாகராஜா), பாலியாற்றங்கரைக் குடியிருப்பு ஒரு வரலாற்று ரீதியான பார்வை (அ.மயூரன்), வன்னிப் பெருநிலப் பரப்பில்ஆய்வுக்குட்படுத்தப்படாத தொல்லியல் மையங்கள் (தி.திபாகரன்) ஆகிய நான்கு பயனுள்ள ஆக்கங்கள் பக்கம் 59-154 வரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

No Deposit Premie Nederland

Grootte Hoe Worde Geloofwaardig Plu Zeker Raden Gegarandeerd? Noppes Online Gokkasten Performen, Va U Liefste Spelontwikkelaars Kan Ik Aantal Bankbiljet Winnen Winnen Tijdens Bij Acteren