செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: கலாநிதி செ.திருநாவுக்கரசு, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், இல. 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்).
xii, 264 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 25×17.5 சமீ.
கல்வி, இலக்கியம் சார்ந்த 19 ஆவண-ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. தாய்மையும் தயையும், ஈழத்து இலக்கியத்தில் கைலாசபதியின் பங்களிப்பு, ஈழத்தமிழ் இலக்கியங்களில் குடியுரிமைப் பிரச்சினையின் பிரதிபலிப்பு, ஈழத்தமிழ் இலக்கியங்களில் நிலக்குடியேற்றப் பிரச்சினையின் பிரதிபலிப்பு, ஈழத்தமிழ்ச் சிறுகதை இலக்கியங்களில் மொழிப் பிரச்சினையும் இன உணர்வும், ஈழத்தமிழ் நாவல்களில் மொழிப்பிரச்சினையும் இன உணர்வும், ஈழத்தமிழ் இலக்கியங்களில் கல்வி, பொருளாதாரப் பிரச்சினைகளின் பிரதிபலிப்பு, ஈழத் தமிழ்ச் சிறுகதை இலக்கியங்களில் இன முரண்பாடுகள், ஈழத் தமிழ் நாவல்களில் இன முரண்பாடுகள், ஈழத் தமிழ்க் கவிதைகளில் இன முரண்பாடுகள், வன்னிப் பிரதேசத் தமிழ் நாவல்கள் ஆவணப்படுத்தலுக்கான ஓர் அறிமுகம், தமிழர்களது உளவியற் பாரம்பரியத்தில் உளப்பிணி நீக்கும் உபாயங்கள், இலங்கையின் ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட்ட ஒழுங்கமைப்பும் நடைமுறைகளும், புதிய கல்விச் சீர்திருத்தமும் இடைநிலைக் கல்வி ஒழுங்கமைப்பும், ஊக்கல், கற்றல் இடமாற்றம் ஆகியன தொடர்பான கல்வி உளவியலாளர்களின் கருத்துக்களும், வகுப்பறைப் பிரயோகமும், பிளேட்டோவின் இலட்சியத்தில் உருப்பெற்ற கிரேக்கக் கல்விப் பாரம்பரியமும், நவீன கல்விச் செயற்பாடுகளும், பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முதன்மையாசிரியர்களின் பங்களிப்பு-யாழ்ப்பாணப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு, முதன்மை ஆசிரியர்களின் கடமைக்கூறுகளும் செயற்பாடுகளும் ஆகிய 19 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.