கல்முனை: அஸ்மா வெளியீடு, இல.164 ஊ, செய்லான் வீதி, 1வது பதிப்பு, மே 2014. (சாய்ந்தமருது: ஸயான் டிஜிட்டல் பிரின்டர்ஸ்).
ix, 38 பக்கம், ஓவியங்கள்;, விலை: ரூபா 170., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4905-00-9.
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான திருமதி பாத்திமா நஸீறா அலி அவர்களின் பல்வகைப் படைப்புகளின் தொகுப்பு நூல் இது. சுபீட்சமான வாழ்க்கைக்கு சமாதானம் என்ற பதாதையின்கீழ், சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டு, கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைச்சுவைத் துணுக்குகள், நாடகம், பாடல்கள் போன்ற தனது பல்வேறு படைப்புகளையும் ஒருங்குசேர்த்து இந்நூலின்வழி வழங்கியுள்ளார். நம்பிக்கை ஒளி-கவிதை, ஒற்றுமைக் குரல்- சிறுகதை, விடுகதைபோல் விடை சொல்லுங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், சிந்தனைத் துளிகள், நல்லவன்-உருவகக் கதை, ஒரு சிறுவன் விரும்பும் சமாதானம் -கட்டுரை, சிறுவர் பாராளுமன்றம்- நகைச்சுவை நாடகம், எறும்புகள்- பாடல் ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் கையெழுத்துப் பிரதியாக வலம்வந்து பின்னர் 2004 சுனாமி அனர்த்தத்தின்போது சேதத்திற்குள்ளாகியிருந்த இந்நூல் இப்போது அச்சுருவில் வெளிவந்து பரந்த மாணவ/இளம் வாசகர்களையும் அடைந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001436).