சித்தன் (இயற்பெயர்: எஸ்.ஜே.பிரசாத்). கொழும்பு 13: டிசைன் லாப், ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப்).
viii, 183 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 400., அளவு: 20×12.5 சமீ.
வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்த ‘நான் சித்தன்’ என்ற கேள்வி பதில் பகுதி இங்கு தனியானதொரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மனிதனில் தோன்றும் அறியாமையை மூடநம்பிக்கைகளை சந்தேகங்களை, அவநம்பிக்கையை கிழித்துப் போடும்படியும் புதுப்பித்துக் கொள்ளும்படியும் (நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பும்படியும்) மானிட மேம்பாட்டுக்கான இந்நூல் வாசகர்களிடம் விண்ணப்பிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49763).