மஜீத். திருச்சி மாவட்டம்: அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2005. (சென்னை 5: மணி ஓப்செட்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21×14 சமீ., ISBN: 81-7720-060-7.
‘இன்று இலக்கியத்துறையில் முறைகளை அல்லது படைப்புக்களை வழிநடாத்தும் உள்ளார்ந்த பண்புகள் உடைக்கப்பட்டு பிரதியிடப்படும் நிலை அதிகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனினும் மிகப் பல்லாண்டு காலமாக கவிதை, சிறுகதை, நாவல் என்கின்ற எல்லைகள் மீறப்படாது அதற்குள் சுருங்கிய பிரதியாக்க மனம் அல்லது சிந்தனையானது மிகப் பலமானதும் உறுதியானதுமான வன்முறையாகும்’ என்று கூறும் அக்கரைப்பற்று மஜீத், இதனை பிரதிகளின்மீது ஆழப் புதைந்து புரையோடிப்போன ஒரு நோயாகக் காண்கிறார். இவரது இலக்கியக் கட்டுடைப்பின் பரீட்சார்த்த வடிவமாக இந்நூல் அமைகின்றது. பின்னவீனத்துவத் தன்மைகள் மேலோங்கியதாக அமைந்த கவிதைகள். தொடர் அறு முறை எழுத்தை இதில் மஜீத் கையாண்டிருக்கிறார். காதல் கவிதைகளும் புறவயக் கவிதைகளுமாக பலவகைக் கலவையாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48859).