10834 தேனகம்: பதினான்காவது ஆண்டு முத்தமிழ் விழாச் சிறப்பு மலர்.

த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச செயலக கலாசாரப் பேரவை, மண்முனை வடக்கு, 1வது பதிப்பு, 2006. (மட்டக்களப்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 96 பக்கம், அட்டவணைகள், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 70., அளவு: 25×18 சமீ.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆண்டுதோறும் தமது பிரதேச இலக்கிய ஆர்வலர்களின் படைப்புகளைத் தொகுத்து கலாசாரப் பேரவையினூடாக ‘தேனகம்’ என்ற ஆண்டு மலர்களின் வாயிலாகப் பதிவுசெய்து  வருடாந்த முத்தமிழ் விழாவின்போது வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் பதினான்காவது ஆண்டு மலராக வெளிவந்துள்ள இவ்விதழில் சிறப்பு விருது பெறுவோர் விபரம், கலைஞர் கௌரவம் பெறுவோர் விபரம், அஞ்சலி, வாழ்த்துச் செய்திகள், விளம்பரங்களுடன், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54566).

ஏனைய பதிவுகள்

How must Dating Sites Operate?

From personal ads that began appearing in newspaper publishers in the 1700s to videocassette dating services that launched years back, the tools people use to