எஸ்.வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, நல்லூர், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 74 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-4745-05-6.
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பட்ட நூல். இதில் தேவகுமாரி சுந்தரராஜன் எழுதிய ‘வாய்மொழி இலக்கியங்கள்’, இரா.ரமேஷ் எழுதிய ‘அதிகாரப் பன்முகப்படுத்தலும் உள்ளுராட்சி அரசாங்க முறையும்’, எஸ்.வை.ஸ்ரீதர் எழுதிய ‘மலையக நாவல்கள் சித்திரிக்கும் பெரிய கங்காணி: ஒரு நோக்கு’, பெருமாள் சரவணகுமார் எழுதிய ‘தட்சிண கைலாச புராணம்’ ஆகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57654).