10838 இதயத்தின் இளவேனில்: (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

இ.முருகையன். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, இல. 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

75 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-8637-27-2.

மைக்கல் ட்றேய்ற்றன், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜோன் டன், றொபேட் எரிக், ஜோன் சக்கிளிங், வில்லியம் பிளேக், வில்லியம் வேட்ஸ்வேத், ஷெல்லி, பைரன், ஜோன் லெஃமான், எஸ்ரா பவண்ட், அன்ட்றூ மாவெல், பிரான்ஸ் கஃப்கா, சொபொக்கிளீஸ், ஏ.சி.புஷ்கின், றொபெர்ட் ஃபிறொஸ்ற், விளாடிமீர் மாயாக்கோவ்ஸ்கி, சமீஹ் அல் காசிம், ஆகிய பன்னாட்டுக் கவிஞர்களின் 31 தேர்ந்த கவிதைகளின் தமிழாக்கம் இதுவாகும். இவை பல்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவை.  முதல் 19 கவிதைகளும் ‘ஒரு வரம்’ என்ற தலைப்பில் முன்னர் சிறு நூலாக வெளிவந்திருந்தது. மேலும் தமிழாக்கம் செய்யப்பட்ட ஏழு பாலஸ்தீனக் கவிதைகள், கவிஞர் எம்.ஏ.நுஹ்மானின் தொகுப்பில் வெளியாகிய ‘பாலஸ்தினக் கவிதைகள்’ என்ற நூலில் இடம்பெற்றவை. இத்தமிழாக்கங்கள் அனைத்தும் கவிஞர் முருகையனின் சீரிய மொழிபெயர்ப்பு ஆற்றலை அடையாளம் காட்டுவன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54189).

ஏனைய பதிவுகள்

13114 வித்தக விநாயகர்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). xxii, 117 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14  சமீ.,

Au top 10 Précises en france

Content Salle de jeu Variable Roulette Du jeu avec salle de jeu malins via contenance , ! pour une connectivité franchement-rapide, vous pouvez tirer parti

13255 மூலமந்திர யந்தரங்களும் பூஜாவிதியும் அடங்கிய மலையாள மாந்திரீக வராகிமாலை.

எ.நடேச தம்பிரான். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை). 108 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.40, அளவு: 17.5×12 சமீ. அம்பிகையிடம்