10856 பாடசாலைகட்கான இலங்கைப் புவியியல்.

A.D.பப்டிஸ்ட். மதராஸ் 2: ஓரியன்ட் லாங்மன்ஸ் லிமிடெட், 36 A, மௌன்ட் ரோட், 1வது பதிப்பு, 1965. (மதராஸ் 18: த ஜுப்பிட்டர் பிரஸ்).

x, 338 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 5., அளவு: 19.5×13.5 சமீ.

இந்நூல் இலங்கைப் பள்ளிக்கூடங்களில் மேல்வகுப்புக்களுக்குப் பயன்படுமாறு எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளிவந்துள்ள இலங்கை மாணவர்களுக்கான பூமிசாத்திரம் (A Junior Geography for Ceylon Schools)  என்ற நூலின் தொடர்ச்சியாக இது வெளிவந்துள்ளது. முன்னைய நூலில் தவறவிடப்பட்ட தொடக்கப் பௌதிகப் புவியியல், பொதுப் புவியியல் என்பன இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது விவரம், அமைப்பும் பௌதிக வரலாறும், தரைத்தோற்றம், ஆறுகள், காலநிலை, இயற்கைத் தாவரம், மண்ணினங்கள், நீர்ப்பாய்ச்சல், பயிர்ச்செய்கை, மீன் பண்ணைகள், கனிப்பொருள்கள், பரும்படியாகச் செய்தலும் கைத்தொழிலும், குடியும் மக்களினங்களும், போக்குவரவுகள், வர்த்தகம், இயற்கைப் பிரதேசங்கள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84551).  

ஏனைய பதிவுகள்