க.கைலாசபதி, சர்வமங்களம் கைலாசபதி. சென்னை 600 021: பாட்டாளிகள் வெளியீடு, 42, நாராயணப்பா நாயக்கன் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1979. (சென்னை 600 014: மூவேந்தர் அச்சகம்).
viii, 248 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: இந்திய ரூபா 14., அளவு: 20.5×13.5 சமீ.
பேராசிரியர் க.கைலாசபதியும் துணைவியாரும் மக்கள்சீனக் குடியரசில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து தாம் பெற்ற அனுபவங்களையும், கண்டு கேட்டு அறிந்தவற்றையும் இந்நூலில் சுவைமிகு பிரயாண இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கின்றனர். சீன வரலாறு, கலாச்சாரம், அரசியல், உணவு வகைகள் பற்றிய ஆழமான அறிவும் அனுபவமும் இந்நூலில் பிரதிபலித்துள்ளன. குவாங்சௌ, ஹாங்சௌ, ஷங்ஹாய், நாங்கிங், பீக்கிங், தாச்சாய், தயியுவான், யெனான், சியான், குவாங் சௌ ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.