10879 ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினம் வரை: பயண அனுபவங்கள்.

அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்).

vi, 74 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8448-05-2.

தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்த பயணக் கட்டுரை இதுவாகும். இலக்கியத்துறையில் ஈடுபாடுகொண்ட ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், அல் அஸூமத், தாஸிம் அஹமது ஆகியோருடன் இக்கட்டுரையாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட இந்தியப்பயணத்தின் சுவைமிகு அனுபவங்கள் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த ஆசிரியரின் நூல் அறிமுக விழா, கேரளாவின்-அல்லப்பே படகுச்சவாரி, மைசூர் மகாராஜாவின் அரண்மனை, தீரர் திப்புசுல்தானின் நினைவாலயம், கோழிக்கோடு பத்திரிகைக் காரியாலயம் போன்ற பல விடயங்கள் அவர்களது பட்டியலில் அடங்கியிருந்தன. இவற்றில் எதைப் பார்த்தார்கள் எப்படி ரசித்தார்கள் என்பது இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 219419).     

ஏனைய பதிவுகள்

16902 நான் கண்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் : வாழ்வும் பணியும்.

துரைசாமி நடராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 302 பக்கம், ஒளிப்படங்கள்,

12591 – க.பொ.த.உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்: இயக்கவியல் பயிற்சிகள்: பகுதி 1.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி எடியுகேஷனல் பப்ளிக்கேஷன்ஸ், 155, கனால் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1998. (சென்னை 17: மாணவர் நகலகம்). iv, 160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

15846 ஜீவநதி: 150ஆவது இதழ் (ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ்).

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 474 பக்கம், புகைப்படங்கள், விலை: