10904 சட்டத்துறையில் கமுதர் (க.மு.தர்மராஜன்).

எஸ்.மகேன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: க.மு.தர்மராஜன், பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும், 1வது பதிப்பு,  2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(17), 55 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதநேயப் பண்பாளர், சட்ட ஆலோசகர், தர்மராஜா அவர்கள் நீதித் துறையில் பொன்விழா ஆண்டில் காலடி எடுத்துவைத்தமையின் ஞாபகார்த்தமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. திரு.தர்மராஜா அவர்கள் பற்றி பத்திரிகைகளில்  வெளிவந்த கட்டுரைகள், மற்றும் ஒளிப்படங்கள், திரு தர்மராஜா பற்றியும் அவரது பணிகள் பற்றியுமான ஒரு வெட்டுமுகத்தைத் தருகின்றது. இதிலுள்ள கட்டுரைகள் அன்னாரின் பொன்விழா தினமான 01.01.2014 அன்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட வாழ்த்துக் கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பாக அமைகின்றது. திரு. க.மு. தர்மராஜா 50 ஆண்டுகளாக சட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருபவர்.  அமரத்துவமடைந்த சட்டத்துறை அறிஞர்களான என்.ரி.சிவஞானம், எஸ்.ஆர். கனகநாயகம் அகியோரின் உதவியாளராக யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய இவர் 1995முதல் கொழும்பிலும் சட்டத்துறையில் சேவையாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்திலோ, சட்டக் கல்லூரியிலோ சட்டம் பயின்றிராத போதிலும் இளம் சட்டத்தரணிகளின் சிறந்ததொரு வழிகாட்டியாக இருந்து வருவதுடன் காணி வழக்குகள், தத்துவ வழக்குகள், விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட குடியியல் வழக்குகளுக்கான பிராது, மனு, சத்தியவோலை, சொத்துப் பட்டியல் போன்றவற்றை வரைந்தும் ஆலோசனை வழங்கியும் வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

10150 கனடா, ரொறன்ரோ ஸ்ரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம்: மஹா கும்பாபிஷேக மலர்.

கிருஷ்ணா சிவப்பிரகாசம் (மலராசிரியர்). கனடா: ஸ்ரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, ஜுலை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). xliii, 84 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

16615 அதிர்ஸ்டம் (சிறுகதைத் தொகுப்பு).

கே.எம்.எம். இக்பால். கிண்ணியா 4: கே.எம்.எம். இக்பால், அப்துல் மஜீத் எம்.பி. வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). v, 106