10909 சூரியப் புதல்வர்கள்: மாவீரர் காவியச் சோலை: தொகுதி 1.

முருகர் குணசிங்கம் (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

764 பக்கம், வண்ணப்படங்கள், விலை: £ 25, அளவு: 30×21 சமீ., ISBN: 978-0-646-94530-9.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் 27.11.1982இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறீலங்காப் படைகளின் முற்றுகையில் விழுப்புண் அடைந்து தமிழகத்தில் சிகிச்சை பெறும்போது வீரச்சாவடைந்து ஆகுதியான முதலாவது போராளி லெப்டினன்ட்  சங்கர் (செ.சத்தியநாதன்) முதல், 31.12.1995இல் யாழ்ப்பாணம் வலிகாமம் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண் அடைந்து சிகிச்சையின்போது வீரச்சாவடைந்த பூ.ஜெகேஸ்வரி (வீ.வே.வளர்மதி) ஈறாக இத்தொகுதியில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் இயக்கப் பெயர், இயற்பெயர், சொந்த இடம், பிறந்த திகதி, மறைந்த திகதி, மறைவுக்கான களச் சம்பவம் ஆகிய முக்கிய தகவல்களை வண்ணப் புகைப்படங்களுடன் இந்நூலில் தேடித் தொகுத்து வெளியிட்டுள்ளார். இத்தகைய பதிவுகள் முன்னர் சிறிய அளவில் முனனெடுக்கப் பட்டிருந்த போதிலும், இரண்டு பாகங்களில் ஆகுதியான  20,000 போராளிகளின் விபரங்களைத் தாங்கி வெளியிடப்பட்ட நூல் என்ற வகையில் இப்பாரிய நூல் தொகுதி முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனைய பதிவுகள்

Bonus des casinos en ligne

ラスベガスのオンラインカジノ Paypal online casino Bonus des casinos en ligne Roleta é outro jogo de mesa clássico, muito popular tanto em casinos físicos quanto online. Tipos: