10916 நல்லதிபருக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: திருமதி இந்திரா இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxvi, 222 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

கொழும்பு இராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் திருமதி இந்திராணி இராஜரட்ணம் அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்படும் சேவை விதப்பு மலர். இரண்டு பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இம்மலரின் முதலாவது பிரிவில் திருமதி இந்திரா இராஜரட்ணம் அவர்களின் வாழ்விலிருந்து சில துளிகள், திருமதி இந்திரா இராஜரட்ணம் அவர்களின் வாழ்க்கைப் பதிவகள் ஒரு நோக்கு (வாரிதா மஜுமுடீன்) ஆகிய இரு கட்டுரைகளும், ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவும் இடம்பெறுகின்றன. இரண்டாவது பிரிவு கட்டுரைகளுக்கானது. இதில் கல்வியியல், சமயம்-இலக்கியம், கவின்கலை, அரசியல் ஏனையவை என்னும் பிரிவுகளின் கீழ் 27 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழர் கல்வியும் இந்துபோர்ட் இராசரத்தினமும் (சபா ஜெயராசா), இலங்கையின் கல்விமுறை எதிர்நோக்கும் சவால்கள் (சோ.சந்திரசேகரன்), தமிழ்க் கல்விச் சிந்தனையில் நடைமுறையில் மாறுதல்களின்றேல் தமிழர்களின் கல்வித் தரம் சீரழிந்து பாழ்படும் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இடைநிலைக் கல்வியில் தராதரம் பற்றிய எழுவினாக்கள் (மா.கருணாநிதி), நேரத்தை முகாமித்தல் (தை.தனராஜ்), சமூக விருத்தியில் ஆசிரியர்களின் வகிபங்குகள் (சசிகலா குகமூர்த்தி), பாடசாலைக் கல்வியில் அழகியற் கல்வியின் முக்கியத்துவமும் ஆளுமை வளர்ச்சியில் அதன் பங்கும் (மீரா வில்லவராயர்), மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இயலாமை (கே.கஜவிந்தன்), சங்க இலக்கியத்தில் முருக வழிபாடும் மூலப்பரம்பொருள் தேடலும் (ஸ்ரீ பிரசாந்தன்), இபமா முகன் (வசந்தா வைத்தியநாதன்), இல்லம் காக்கும் நாயகி (இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு), ஈழத்து இலக்கியமும் சமூக விடுதலையும்: சில குறிப்புகள் (தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ), ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையின் தோற்றம் – மறு மதிப்பீடு (செ.யோகராசா), கற்பிதமும் மீட்பும்: செ.கணேசலிங்கத்தின் நீண்ட பயணம் குறித்த கருத்தாடல் (வ.மகேஸ்வரன்), பார்த்தல் என்னும் தியானம் (கோபாலபிள்ளை கயிலாசநாதன்), ஹெனிங் மான்கெல் நாட்குறிப்பு-ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு (ஜி.ரி.கேதாரநாதன்), அரங்கில் பார்வையாளர்கள் (சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ்), ஈழத்துக் கவிதைகளில் தேசமும் தேசியமும் (க.இரகுபரன்), சிறக்க வாழ்வீர் (பெற்றோர்), அடையாள அரசியலின் அரசியல் (சி.சிவசேகரம்), தேசியவாதம் பற்றி புரிந்துகொள்ளுதல்: கோட்பாட்டுரீதியான அறிமுகம் (இராஜரட்ணம் ருக்ஷான்), கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் (எஸ்.ஜெபநேசன்), நீரிழிவு பற்றிய தவறான எண்ணங்களும் மேறகொண்டு செய்யவேண்டியவையும் (எம்.கே.முருகானந்தன்), குழழன யனெ குரவரசந (வு.யேபயசயவயெஅ)இ வாழ்த்துகின்றேன் (ஜின்னாஹ் ஷெரிபுத்தீன்), இந்திய அளவையியல் ஒரு நோக்கு (கே.டி.இராஜரட்ணம்), இந்திரா என்னும் இருவேறு ஆளுமை (வ.மெல்லியல்) ஆகிய 27 கட்டுரைகள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்