10917 நல்லாசிரியனுக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: க.த.இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 256 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

கொழும்பு இந்துக் கல்லூரி பிரதி அதிபர் திரு. க.த.இராஜரட்ணம் அவர்களின் இளைப்பாறுகையையொட்டி வெளியிடப்படும் சேவை விதப்பு மலர். இம்மலரின் பதிப்பாசிரியர் குழுவில் திரு. கே.கே.உதயகுமார், திருமதி ப.தங்கராஜா, திருமதி த.மாணிக்கராஜா, திருமதி கௌ.சித்தானந்தன் ஆகியோர் அடங்கியுள்ளனர். இரண்டு பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இம்மலரின் முதலாவது பிரிவில் திரு.க.த.இராஜரட்ணம் அவர்களின் வாழ்விலிருந்து சில துளிகள், திரு.க.த.இராஜரட்ணம் அவர்களின் வாழ்வியல் சுவடுகள் ஒரு தரிசனம், A Note on K.T.Rajaratnam, எமது உள்ளத்து நினைவுச் சுவடுகள் ஆகிய நான்கு கட்டுரைகள் உள்ளன. இரண்டாவது பிரிவில் இந்துமரபில் மெய்யியலும் மெய்யியற் சொல்லாடல்களும், Hindu Society and Moral Values, Fellowship with God, மனதின் இருக்கைத் தத்துவம், உளவியல் ஒரு விஞ்ஞானமாக, இசையும் மருத்துவமும்,  பரதம்-அதன் முத்திரைகள், காலத்தை வென்ற நவயதார்த்தச் சித்தாந்தம், பிளேட்டோவின் கல்விச் சிந்தனைகள், விழுமியக் கல்வியின் பயன்கள், நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் கொத்தி வழிபாடு, மனவெழுச்சிகள் நுண்ணறிவு ஒரு கோட்பாட்டுச் சட்டகம், கைத்தொழில் சமூகத்திலிருந்து வேறுபடும் அறிவுசார் சமூகத்தின் கல்விமுறை, இலங்கையில் கல்விக் கொள்கைகள் நடைமுறைகளும் விளைவுகளும், பிள்ளை மையக் கல்வி நிராகரிப்பும் ஜனநாயக-மத்தியத்துவமும், ஆசிரியத்துவம், உலகில் மேலோர், தொன்மையான தமிழ் மரபில் கதையுரைக்கும் பண்பாடு, கருப்பொருளை அழிப்பதற்கான மணியோசை, தேர்தல் முறைகளில் இலங்கைக்குப் பொருத்தமானது எதுவென்பது பற்றிய நோக்கு, ஓவியர் வான்கொ- இறந்த பின்பும் கலைஞன், அரங்கியலுக்கு புதிய பார்வை புதிய பங்களிப்பு, ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளர்ந்ததும் வளர வேண்டியதும், மாற்றுக் கலாசாரத் தளம் எமக்கு அவசியம்தானா, தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் வரும் கருத்துவேறுபாடுகள், மட்டக்களப்பு பிரதேச மொழிவழக்கு, பண்பாட்டு விழுமியங்களைப் பேணி பகிடிவதை கலாச்சாரத்தை ஒழிப்போம், Catastrophic Nature of Global Warming, கூவாத குயிலொன்று, Why there is noLankan Tamil Cinema,  அனைத்திந்தியாவுடனான முதல் இலக்கிய ஊடாட்டங்கள் சமண பௌத்த இலக்கியங்களில் தமிழ் நிலை பற்றிய கருத்தாடல்கள், இதழாசிரியப் பெறுமானங்கள் எதிர்நோக்கும் சவால்கள், இருபத்தியொராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை, உயிர்ப்பான மண் முகாமைத்துவம் ஆகிய பல்வேறு துறைகளையும் சார்ந்த 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்