பதிப்பாசிரியர் குழு. கொழும்பு: பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா விழாக் குழு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2008. (வத்தளை: உதயா அன் கொ, 17/18, நீர்கொழும்பு வீதி).
x, 282 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20 சமீ.
பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களின் சேவை நயப்பு விழாவை முன்னிட்டு அவரது நண்பர்கள், மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட பாராட்டுவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்புமலர். மலரின் முதலாம் பகுதியில் தெ.மதுசூதனன், தம்பு சிவா ஆகியோர் எழுதிய பேராசிரியரது வாழ்க்கைக் குறிப்புகளும் அவரது பணிகள் பற்றிய விபரங்களும் உள்ளடங்கியுள்ளது. இரண்டாம் பகுதியை கல்வித்துறைசார் தமிழ்க் கட்டுரைகள் அணிசெய்கின்றன. பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் சூழல்சார் அறைகூவல்கள்: ஒரு கூட்டு அணுகுமுறை (மா.சின்னத்தம்பி), கட்டிளமைப்பருவ பாடசாலை மாணவர்களின் கற்றலுக்குத் தடையாகவுள்ள காரணிகள் பற்றிய ஆய்வும் தீர்வுகளும் (பா.தனபாலன்), இலங்கையின் கல்வியமைப்பில் மாற்றங்களுக்கு உந்துவிசையாக அமையும் செல்நெறிகளும் பிரயோகங்களும் (தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம்), நல் ஆசிரியன் (சி.சிவநிர்த்தானந்தா), சிந்தனை மிக்க ஒரு செயலாகக் கல்வித் தலைமைத்துவம் (ப.கா.பக்கீர் ஜஃபார்), அறிவுசார் மூலதனம் (கே.தேவராஜா), இந்திய ஆரம்பக் கல்வி மேம்பாட்டுக்கான புதிய ஆலோசனைகள் (சோ.சந்திரசேகரம்), கல்விச் செயன்முறையில் உலகமயமாக்கல் ஏற்படுத்திவரும் தாக்கங்கள் (இராமநாதன் ஈஸ்வரதாசன்), பாடசாலை மையக் கல்விசார் ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் (எஸ்.கே.யோகநாதன்), இலங்கையில்; உயர்கல்வியின் அண்மைக்காலப் போக்குகள் (அ.நித்திலவர்ணன்), இஸ்லாமிய தத்துவப் பார்வையில் பெண்கள் கல்வியும் தாய்மார் பள்ளிப் பரீட்சார்த்த முயற்சிகளும் (மா.செல்வராஜா), சமகாலத்தில் பெண்களுக்கான கல்வி வாய்ப்புகளும் சமூக மதிப்புகளும் (ஜெ.இராசநாயகம்), மொழி: ஒரு பன்முகப் பார்வை (அனுஷ்யா சத்தியசீலன்), பேராசிரியர் சபா.ஜெயராசாவும் ஈழத்தில் சிறுவர் இலக்கியமும் (செ.யோகராசா), பிரான்ஸ், பிரெஞ்சு, பிரெஞ்சியர் வரலாற்றியல் – மொழியியல் – சமூகவியல்-கள ஆய்வு (ச.சச்சிதானந்தம், பிரான்ஸ்), உலகளாவிய செல்நெறியும் கற்றலும் (மா.கருணாநிதி), கற்றல் கற்பித்தல் செயன்முறையில் கற்றல் பாங்கில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் (உலகநாதர் நவரத்தினம்), ஆசிரியர் விருத்தியும் மாணவர் கற்றல் செயற்பாடுகளும் (சி.சரவணபவானந்தன்), ஆய்வில் இலக்கிய மீளாய்வு (மு.கௌரிகாந்தன்), கல்விக் கோட்பாடுகளும் இலக்கியக் கோட்பாடுகளும்-பேராசிரியர் நூல் ஒன்றின் ஆய்வு (இ.இரவீந்திரநாதன்), பின் நவீனத்துவ கோட்பாடும் அதன் பிரயோகமும் (அ.எ.றிச்சேர்ட்), இலங்கையின் வரண்ட வலய (அரச உதவியுடனான) குடியேற்றத் திட்டங்களும் இன முரண்பாடும் (அ.சிவராஜா), அவசரகாலக் கல்விச் செயற்பாடுகள்- ஒரு பார்வை (தி.கமலநாதன், அ. ஸ்ரீஸ்கந்தராஜா) ஆகிய கட்டுரைகள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் ஆங்கில மூலக் கல்வியியல்சார் கட்டுரைகள் ஐந்து இடம்பெற்றுள்ளன. வண.எஸ்.ஜெபநேசன், கே.செல்லமணி, எஸ்.மோகன், ஹேசிந்த் என்.ஜெபநேசன், பீ.வினோபாபா, ஏ.வி.மணிவாசகர் ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.