10944 சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை).

(10), 89 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-52273-0-8.

இந்நூல் பன்னிரு இயல்களையும் மூன்று பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது. காலப் பின்புலமும் கதிரைவேற்பிள்ளையும், நா நலம், கண்டன வன்மை, அருட்பா மோதலும் திருமுறை எழுச்சியும், அகராதிச் சிறப்பு, உரைத்திறன், உரைநடைப் பாங்கு, செய்யுள் ஆக்கம், பதிப்புப் பணி, ஆசிரிய சேவை, சதாவதான மாட்சி, வகிபாகம் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘காலப் பின்புலமும் கதிரைவேற்பிள்ளையும்’ என்ற முதலாவத இயலையும், ’வகிபாகம்’ என்ற நிறைவு இயலையும் தவிர்த்து, ஏனைய இயல்கள், நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பணிகளை ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றன. முதலாவது பின்னிணைப்பாக ‘அருட்பா-மருட்பா’ நூற்கருத்துக்களை மறுத்து ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இரண்டும் இணைந்த நிலையில் தரப்பெற்றுள்ளன.  இரண்டாவது பின்னிணைப்பாக கால வரிசையில் நா.க.வின் வரலாறும், மூன்றாவது பின்னிணைப்பாக அவரது நூற்பட்டிலும் தரப்பெற்றுள்ளன. இயல்களின் இடையே அவரது நூல்கள் சிலவற்றின் முதற்பதிப்புகளின் முகப்புப் பக்க நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஈழத்து ஆளுமைகள் வாழ்வும் வகிபாகமும் என்ற தொடரில் வெளிவரும் மற்றுமொரு நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Online casino Neosurf Put

Articles How to Put at the Neosurf Gambling enterprises Advantages and disadvantages away from NeoSurf Casinos Spinfinity Local casino Incentive Rules Do you know the