கலைவாணி நடராஜா. அவுஸ்திரேலியா: திருமதி ஞானசக்தி சண்முகசுந்தரமும் குடும்பத்தினரும், 33, Boyanna Road, Glenwaverley, Victoria, 1வது பதிப்பு, 1997. (சென்னை 600005: மாசறு பதிப்பகம், 75, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை).
80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
ஈழத்துக் கலை இலக்கியங்களில் விழிப்புணர்வு ஏற்பட்ட காலம் முதல் நாடகம், கிராமியக்கலை, நாட்டாரியல் போன்ற பாரம்பரியங்களை அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் முயற்சி தொடங்கலாயிற்று. பலர் இத்துறையில் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவரான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆசிரியரும் அதிபருமான அமரர் தம்பு சண்முகசுந்தரம் (1925-1986)அவர்களின் ஆக்கங்கள், செயற்பாடுகள், தொடர்பான ஒரு அறிமுக ஆய்வாக இந்நூல் அமைகின்றது. வாழ்க்கை வளம், கலைப்பாரம்பரிய மீட்பும் புத்தாக்கமும் (நாடகம், கிராமியத்துறை, இசை), எழுத்து (கலை இலக்கியம், கட்டுரை, விமர்சனம்), புலமைச் செயற்பாடுகள் (கலை, இலக்கியம், கல்வி), சண்முகசுந்தரத்தின் வாழ்க்கை நோக்கு, ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தொடரும் இரண்டு பின்னிணைப்புகளில் ஆசிரியரின் சிறுகதைகளின் பட்டியல், நாவலின் பட்டியல், நாடகங்களின் பட்டியல், நூற்பட்டியல் என்பன சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17222).